ஒரு வாரத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்தால், ஜே.வி.பி பாரிய தொழில் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அதன் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பாரிய தொழில் மற்றும் அரசியல் நடவடிக்கை
மேலும் கூறுகையில், இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இப்போது கூற வேண்டிய அவசியமில்லை.
ஒரு வாரத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பதை ஜே.வி.பி அவதானித்து வருவதுடன் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்தால், ஜே.வி.பி பாரிய தொழில் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
அரசாங்கம் என்ன செய்வது என்பது தொடர்பில் ஒரு வார காலம் காத்திருப்பதாகவும் ஜே.வி.பி தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
