தலதா மாளிகையின் மின்சார கட்டணம் 28 இலட்சமாக உயர்வு
தலதா மாளிகையின் ஒக்டோபர் மாத மின்சார கட்டணம் 28 இலட்சத்தை கடந்துள்ளமையினால் அதனை செலுத்த முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
எனவே மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், மல்வத்து - அஸ்கிரி மகா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டுள்ளார்.
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு மாற்று வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையுடன் கலந்துரையாடப்படும் என தலைவர் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முறையின் பிரகாரம் மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளதாக தியவதன நிலமேய குறிப்பிடுகின்றார்.
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam