மின்சார தொடருந்து திட்டம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் நோக்கம்
மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்திற்கு தேவையான ஆரம்பத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டன. இந்த சேவையின் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.

அதன்படி, பெலியட்டாவிலிருந்து 'ருஹுனு குமாரி' தொடருந்து மூலம் வரும் பயணிகள், பானந்துறையில் இறங்கி மின்சார தொடருந்து மூலம் கொழும்பை சென்றடையும் வாய்ப்பைப் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைப்பில் தாமதமான பல அபிவிருத்தி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.