இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்து! 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்தை அறிமுகப்படுத்த 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
80 பில்லியன்
அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், 80 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் மின்சார தொடருந்து சேவைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் கொழும்பு மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திட்டம் நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
மின்சார தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பயணிகளுக்கு விரைவான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.