ஜனநாயகத்துக்கு தேர்தல் அவசியம் கருத்தாடல் நிகழ்வு
ஜனநாயகத்துக்கு தேர்தல் அவசியம் எனும் தலைப்பில் முக்கியமான கருத்தாடல் செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (03.04.2024) மட்டக்களப்பில் சுற்றுலா விடுதி ஒன்றில் தேர்தங்கள் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for monintoring Election violence) ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளளது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சமகால சவால்கள்
மேலும் நிகழ்வில் சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முகமட், மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் நிறைநேற்று அதிகாரி, பேராசிரியர் கிருஸ்ணமோகன், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜனநாயகம் மற்றும் தேர்தல்களின் பால் சமகால சவால்கள் தொடர்பில் தெளிவூட்டல்களையும் விளக்கங்களையும் வழங்கினர்.