சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்
தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இன்று வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் மூலம் வாக்காளர்கள் இது தொடர்பாக தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க உட்பட முன்னைய அரசாங்கம்
ஊடகங்கள் மத்தியில் தமது கருத்துக்களை வெளியிட்ட கஜநாயக்க, 2025 உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் 2018 முதல் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை தெளிவாக பிரதிபலிக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் செயல்முறையை தாமதப்படுத்த முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் அரசியல் நிலப்பரப்பில் இருந்து மங்கிப்போக ஆரம்பித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட முன்னைய அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தது,
இதன் விளைவாகவே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் மோசமான நிலையை அடைந்துள்ளது.
மக்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும்
தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சித்ததற்காக, இந்த உள்ளூராட்சி தேர்தலில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் கட்சியாக மாறியதற்காக தேசிய மக்கள் சக்திக்கு அரசாங்கத்திற்கு கஜநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கின் முடிவுகள் தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இழந்த நற்பெயரை மீண்டும் பெற முடிந்துள்ளது என்பதை காட்டுகின்றன என்றும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க கூறியுள்ளார்.