தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஆதரவளிக்காது: நிமல் புஞ்சிஹேவா
எல்லை நிர்ணய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலை தாமதப்படுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஆதரவளிக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்கள்
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, ”தேர்தல்களை தாமதப்படுத்த எல்லை நிர்ணய குழுவை பயன்படுத்த முடியாது என்றும் உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தெரிவு செய்யப்படாத அதிகாரிகளுக்கு வழங்க முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தலை காலம் தாழ்த்த முயற்சி
மேலும், தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களை நியமித்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்து இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.