ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைத்தால் நாடெங்கும் போராட்டம் வெடிக்கும் : மஹிந்த தேசப்பரிய எச்சரிக்கை
நாடெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவே முடியாது. அதனைச் செய்வதாயின் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம்.
சர்வஜன வாக்கெடுப்பு
அதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதி அவசியம். நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் தேவை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இதற்கிடையில் அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் மக்கள் வன்முறையற்ற அமைதிப் போராட்டத்தில் இறங்குவார்கள். நானும் முதலில் சட்டத்தை நாடுவேன். அதன்பின்னர் போராட்டம் செய்வேன். எனவே, அப்படியான முயற்சி இடம்பெறாது என்றே தோன்றுகின்றது.
அதேவேளை, நான் அரசியல் செய்வேன். ஆனால், தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அல்ல பிரதேச சபை தேர்தலில்கூட போட்டியிட மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
