எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கை
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களால் நடத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் (Sajith Premadasa) கையளிக்கப்பட்டுள்ளது.
கருத்து பரிமாற்றம்
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று (18.01.2025) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

இதன்போது, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதி பிரதானி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான கண்காணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இச்சந்திப்பின் போது இரு தரப்புக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 12 மணி நேரம் முன்
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri