தேர்தல் சட்டங்களை மீறிய ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர்
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் தலைவர் சாரங்க அழகப்பெரும தேர்தல் சட்டங்களை மீறி தன்னிச்சையான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த குருகே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேவையில்லாமல் பல நியமனங்களை அவர் வழங்கியுள்ளார்.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்குமாறு பல கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், அவர் செவிசாய்க்கவில்லை. எனவே, சம்பவங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குருகே தெரிவித்துள்ளார்.
உரிய நடைமுறை
எவ்வாறாயினும், தொடர்ந்து அரசியல் நியமனம் செய்வதற்கு எதிராக தேர்தல் ஆணையகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குருகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கிடையில், தொழிற்சங்கக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள, சாரங்க அழகப்பெரும, அனைத்து ஆட்சேர்ப்புகளும் பதவி உயர்வுகளும் உரிய நடைமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சம்பந்தப்பட்ட நியமனங்களுக்காக, ஆணையகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |