மலையக மக்களின் முழுமையான ஆதரவு ரணிலுக்கே: வடிவேல் சுரேஷ் உறுதி
மலையக மக்களின் முழுமையான ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே கிடைக்கப்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று (16) திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது ரணில் விக்ரமசிங்க இம்முறை பதுளை மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்பது உறுதியாகின்றது.
100 வீத வாக்குகள்
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவுக்கு எமது கடமையை நிறைவேற்றி தோட்டத் தொழிலாளர்களின் 100 வீத வாக்குகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |