மார்ச் 4இல் குட்டித் தேர்தல்! ஆராயும் தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 4ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றிருந்தது.
இதன்போது மார்ச் 10ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதுடன், தேர்தலை மார்ச் 4ஆம் திகதி நடத்துவது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைமறு தினத்துக்குள் வெளியிடப்படவுள்ளது.
பிரதேசசபைகள், நகரசபைகள் மற்றும் மாநகரசபைகள் என 340 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டு காலம் நீடிக்கப்பட்டது.
இதன்படி 2023 மார்ச் 20ஆம் திகதிக்குள் புதிய சபைகள் நிறுவப்பட வேண்டும்.
அதேபோல் தேர்தலை நடத்துவதற்கான நிதியையும், திறைசேரியிடமிருந்து தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
