பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்கேற்காது நடைபெறவுள்ள தேர்தல் நேரடி விவாதங்கள்
எதிர்வரும் தேர்தலுக்காக, மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதங்களில் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
எனினும் 16 வேட்பாளர்கள் விவாதங்களில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாக, மார்ச் 12 இயக்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நேரடி விவாதம்
அதன்படி, நாளை 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் முதல் நேரடி விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ச, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் திலித் ஜெயவீர மற்றும் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச மற்றும் மக்கள் போராட்டக் கூட்டணியின் நுவான் போபகே ஆகியோர் செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நேரடி விவாதத்தில் மேலும் பல வேட்பாளர்களுடன் பங்குபற்றவுள்ளனர்.
இதேவேளை, சுயேட்சை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரொசான் ரணசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதத்தில் மேலும் ஐந்து வேட்பாளர்களுடன் கலந்து கொள்ளவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
