தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2025ம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கால அவகாசம்
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளர் நேரில் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும்,தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் இன்று (28) பிற்பகல் 3.00 மணி முதல் மார்ச் 28 ஆம் திகதி இரவு 10:00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை www.elections.gov.lk இல் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிலிருந்து பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri