நிறுத்தப்பட்ட மானியங்களை மீள வழங்க முன்வந்த தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போக பருவத்திற்கான உர மானியம், கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம், ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை மீள வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, குறித்த மானியங்கள் செப்டெம்பர் மாத நிலுவைத் தொகையுடன், ஒக்டோபரில் வழங்கப்படவுள்ளன.
ஒப்புதல் பெறல்
எனினும், கூடுதலாக, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் பெற வேண்டியதன் அவசியத்தை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

மேலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது அரச சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri