தேர்தல் கூட்டத்தில் சீருடையில் தாதியர்: அறிக்கை கோரியது தேர்தல்கள் ஆணைக்குழு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) அனுசரணையுடன் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள், சீருடைகளுடன் பங்குபற்றியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விளக்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் தகவல் வழங்கிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, குறித்த சந்திப்பில் சீருடை அணிந்த தாதியர்கள் இருந்தமை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம், தங்களுக்கு நேரடியாக தொடர்புடையது அல்ல என்றாலும், தங்களுக்குக் கிடைத்த பல முறைப்பாடுகள் காரணமாக, தாம் விளக்கம் கோரியதாக அவர் கூறினார்.
கடமை விடுப்பு
இதேவேளை, அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையில் நடைபெற்ற, தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
