தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டில் பொதுத்தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு அதிக செலவாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு 5.7 பில்லியன் வரை செலவாகுமென்றே தேர்தல் ஆணைக்குழு தரப்பு நேற்று(11) காலை தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆகஸ்ட் 2020 பொதுத் தேர்தலில் ரூ. 5.7 பில்லியன் செலவானது எனவே விரைவில் தேர்தலை நடத்தினால் பட்ஜெட் அதிகரிக்கும்.
செலவு
எங்களின் செலவுகள் பெரும்பாலும் இலங்கை மின்சார சபை, ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், இலங்கை தபால், பொலிஸ் மற்றும் அச்சிடும் செலவுகள்ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தேர்தல் ஒன்றுக்கான செலவின்போது, இலங்கை மின்சார சபை, ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், இலங்கை தபால், பொலிஸ் மற்றும் அச்சிடும் செலவுகள் என்பனவும் அடங்குகின்றன.
அரசியலமைப்பின் படி, தற்போதைய நாடாளுமன்றத்தை அதன் முதல் அமர்வு திகதியிலிருந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்த பின்னரே, பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவரால் கலைக்க முடியும்.
சாத்தியமின்மை
தற்போதைய நாடாளுமன்றம் 2020 ஆகஸ்டில் ஆரம்பமானது. எனவே அதனை ஜனாதிபதியால் மார்ச் 2023 க்கு பின்னரே கலைக்க முடியும்.
இந்தநிலையில் தேர்தல் ஆணைக்குழுவினால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, ஏழு முதல் ஒன்பது வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் சட்டமாகும்.
தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரையில், ஜனாதிபதிக்கான 2019 ஆணை மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆணை இனி கிடைக்காது”என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.