உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இலங்கை வந்த பிரதிநிதிகள்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றின் போது கண்காணிப்புப் பணிகளில் சர்வதேச கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதற்காக ஐரோப்பிய யூனியன், ஆசிய சங்கம் போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் அற்ற ஒரு தேர்தல் என்பதன் காரணமாக இந்த தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
