உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பொதுமக்களின் ஆர்வத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதாக பெப்ரல் கண்காணிப்பாளர்கள் தமக்கு தெரிவித்ததாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள்
அத்துடன் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல்கள் பணிகளுக்காக சுமார் 4000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தபால் மூல வாக்குகளிப்புகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri