தேர்தல் ஆணைக்குழுவிற்கும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க உளளிட்ட ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தேர்தல் செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு
மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனும் சந்திப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் கட்சி செயலாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் சந்திப்பு நடதத உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |