தேர்தல் தினத்தை அரசியல்வாதிகள் அறிவிக்க கூடாது - தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்தை அரசியல்வாதிகள் அறிவிக்கக் கூடாது எனவும் அது அரசியலமைப்பின்படி தேர்தல்கள் ஆணையகத்தின் தனிப்பட்ட விருப்புரிமை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எல்.ஏ.எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினம் தொடர்பாக சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke), செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5ஆம் திகதிகளில் வாக்களிப்பு நடைபெறும் என்று கூறியிருந்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்காக தாயகம் திரும்ப விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம், ஒக்டோபர் 5ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் (Harin Fernando) தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்களை மையப்படுத்தியே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது
ஆணைக்குழுவின் அதிகாரங்கள்
அரசியலமைப்பின் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் மாத்திரமே தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.

இந்நிலையில், ஜூலை 17ஆம் திகதிக்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை எந்த நாளிலும் வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது ஒரு வார நாளாகவோ அல்லது வார இறுதியாகவோ இருப்பது குறித்து ஆணையம் முடிவெடுக்கலாம். எனவே, அறிவிப்புகளை வெளியிடுவது அரசியல்வாதிகளின் பணி அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri