தேர்தல் பிரசாரப் பணிகள் நாளையுடன் நிறைவு
தேர்தல் பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் பூர்த்தியாவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாளையுடன் நிறைவு
வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு அதாவது நாளைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள், வேட்பாளர்கள் தங்களது பிரசாரப் பணிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 9 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
