கிராமிய வாக்காளர்களை இலக்குவைக்கும் அரசியல் நகர்வு: களமிறங்கியுள்ள கட்சிகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கிராமிய வாக்காளர்களை இலக்கு வைத்து அரசியல் கட்சிகள் இம்முறை களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமன்றி அண்மையில் அரசியலுக்கு வந்த திலித் ஜயவீரவின்(Dilith Jayaweera ) மவ்பிம ஜனதா பெரமுண போன்ற கட்சிகளும் கிராமிய மக்களை இலக்கு வைத்தே தங்கள் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.
இதன் ஒரு கட்டமாக கிராமிய மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அரசியல் கருத்துக்கள் என்பவற்றை கண்டறிவதற்கான ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்புகளை தற்போதைய நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுத்துள்ளன.
சிங்கள பௌத்த வாக்கு
மறுபுறத்தில் கிராமங்கள் தோறும் உள்ள விகாரைகளின் தேரர்கள் வழியாக சிங்கள பௌத்த வாக்குகளை மீண்டும் ஒன்று திரட்டும் நோக்கில் பொது ஜன பெரமுணவின் நாமல் ராசபக்ச(Namal Rajapaksa) தலைமையிலான குழுவொன்று களமிறங்கியுள்ளது.

எனினும் கிராமிய மக்களில் பெரும்பாலானவர்கள் பொதுஜன பெரமுண மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக நாமல் தரப்பினர் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர்.
அதே நேரம் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன கிராமிய மட்டத்தில் வலுவான ஆதரவுத் தளமொன்றைக் கட்டியெழுப்புவதில் படிப்படியாக வெற்றியடைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
    
    உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        