ரஷ்யாவில் சரமாரியாக நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூடு-செய்திகளின் தொகுப்பு
ரஷ்யாவின் தெற்கு பகுதியான கிரிம்ஸ்க் நகரில் நேற்று 66 வயது முதியவர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார்.
அவர் வீதியில் நடந்து கொண்டே இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். அவரது இந்த வெறிச்செயலை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.
முதியவரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
இதன்போது 61 வயது முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதேவேளை 3 பேரை சுட்டுக்கொன்ற பிறகு கொலையாளியும் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர் யார்? என்று தெரியவில்லை. எதற்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டார் என்பதும் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam