வவுனியா விபத்தில் முதியவர் ஒருவர் பலி
வவுனியா - இலுப்பையடி பகுதியில் இன்றையதினம் காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இலுப்பையடி பகுதியில் முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது பூந்தோட்டம் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வீதியை கடக்க முற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 56) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
