யாழில் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்
யாழ்ப்பாணம் கோப்பாயில் முதியவரொருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உறவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்றையதினம்(16.05.2023) சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் கார்த்திகேசு திருப்பதி எனும் 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் வசித்து வந்த இவரது வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது.

ஓய்வுபெற்ற ஆசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார்.
அத்துடன் கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் முதியவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan