தெல்லிப்பழையில் விபத்தில் சிக்கி முதியவர் பலி
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அளவெட்டி - முருங்கையன்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பட்டா ரக வாகனம் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து ஒருவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தள்ளார்.
குற்றம் இடம்பெற்ற இடம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவினுள் காணப்படுவதால் அவர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
மரணத்துடன் தொடர்புடையவர் என்ற வகையில், குறித்த சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில், பட்டா ரக வாகனத்தை பின்பக்கமாக செலுத்தியபோது குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



