யாழில் விபத்தில் சிக்கி முதியவர் பலி: சடலத்தை இனங்காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 65-70 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு(23) மேற்குறித்த பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோரிக்கை
குறித்த மரணத்துடன் தொடர்புடையவர் என்ற வகையில், சந்தேக நபர் ஒருவர் தெல்லிப்பழை பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தில், பட்டா ரக வாகனத்தை நேற்றிரவு பின்பக்கமாக செலுத்தியபோது குறித்த முதியவர் தனது வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த சடலத்தை இடங்காண உதவுமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
