யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம்(21.12.2024) உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் சண்டிலிப்பாயில் இருந்து சுழிபுரம் நோக்கி இரவுவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளை, எதிரே வந்த வாகனத்தின் வெளிச்சம் இவரது கண்ணை தாக்கியமையால் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தினுள் விழுந்துள்ளார்.
மரண விசாரணைகள்
இதன்போது, படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உதற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri