மோட்டார் சைக்கிளில் மோதுண்டு முதியவர் உயிரிழப்பு!
நேற்றிரவு சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் (Jaffna) மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தியேட்டர் வீதி, இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கதிரவேலு கந்தசாமி (வயது 69) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை
மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், சைக்கிளில் வந்த குறித்த முதியவர் மோதுண்டுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சைக்கிளில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
