தேயிலை தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி: பிரதான சந்தேகநபர்கள் கைது
எல்பிட்டிய பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்த யுவதியின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த யுவதியின் சகோதரி எல்பிட்டிய மண்ணகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், சகோதரியின் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பொலிஸாரிடம் முறைப்பாடு
இதன்போது அவர் தனது சகோதரியின் கணவருடன் நெருங்கிய உறவை பேணி வந்ததாகவும், பெப்ரவரி 23 ஆம் திகதி மருமகன், தனது இளைய மகளை மீண்டும் வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றதாக ஹன்சிகாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹன்சிகா அழைப்பினை எடுத்து வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னைக் காப்பாற்றுமாறு தனது தாயிடம் கூறியதாகவும், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய ஆயத்தமான நிலையில் மகள் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய, தல்கஹாவத்தை, கங்கபாறை பிரதேசத்தில் வைத்து நேற்றுமுன் தினம் (09) முச்சக்கர வண்டியில் வந்த குழு ஒன்றினால் பலவந்தமாக யுவதி கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கரந்தெனிய, மந்தகந்த, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதீஷானி என்ற யுவதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலை செய்யப்பட்ட யுவதி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தமையினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, சந்தேகநபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri