நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை
எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..