இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு: எதிர்வரும் 8 மாதங்கள் மிக முக்கியமான காலகட்டமென எச்சரிக்கை
எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எல் - நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் வாய்ப்பில்லை
இந்த நிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் செப்டெம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
வறட்சியான வானிலை
இதேவேளை அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தகவலின் படி, 7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9