வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி வெளிநாட்டு தொழில்களுக்கு செல்ல முயன்ற 8 பேரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
ஓமான் நாட்டிற்கு செல்வதாக கூறி 6 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்வதாக கூறிய மேலும் இருவரும், நாட்டிற்கு திரும்புவதற்கு போலி விமான டிக்கெட்டுகளை உருவாக்கி வெளிநாடு செல்ல முயன்றனர்.
அதற்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள், அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட போது, நாடு திரும்புவதற்காக வைத்திருந்த விமான டிக்கெட்டுகள் போலியானது என தெரியவந்ததால், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
சட்டவிரோத பயணம்
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்குவதை தடுப்பது மற்றும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்துடன் பண்டாரநாயக்கா விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பான குடிவரவு ஊக்குவிப்பு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளைக் கொண்டுள்ளது.
குடிவரவு ஊக்குவிப்பு பிரிவு
மலேசியா, ஓமான், டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.
மேலும் விமான நிலைய வளாகம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டில் பணிபுரிய முற்பட்ட பெருமளவிலான இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் இந்த பிரிவு செயற்பட்டு வருகிறது.