சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் எட்டு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, பேராறு,கந்தளாய், பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறுமியின் வீட்டில் மலசல குழி வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுமியின் தாயார் தேவை காரணமாக வெளியில் சென்ற நிலையில் எட்டு வயதுடைய சிறுமியினை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri