இலங்கையில் அழிக்கப்பட்டுள்ள எட்டு வகையான கடவுச்சீட்டுகளால் ஏற்பட்டுள்ள பெருந்தொகை நஷ்டம்
2020 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இருபத்தி ஏழாயிரத்து ஐந்நூற்று முப்பத்தொன்பது வகையான எட்டு வகை கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.
இந்த கடவுச்சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அழிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டுகளின் மற்றொரு தொகை கையிருப்பில் உள்ளமையும் கோபா குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், 55 இலட்ச கடவுச்சீட்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் போயுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.
கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டமைக்கான காரணம்
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பல வருடங்களாக சேகரிக்கப்பட்ட பழைய கடவுச்சீட்டுகள் பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான புதிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக பழைய கடவுச்சீட்டுகளை பாவனையிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.