முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 10.04.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக முல்லைத்தீவு கடலில் இடம்பெறுகின்ற இந்த சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தி தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கடற்தொழில் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
