ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட்ட 8 பேர் கைது
போதைப்பொருள் பாவனை தொடர்பில், ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையிலிருந்து கோவாவிற்கு இயக்கப்படும் சொகுசு கப்பலில், போதைப்பொருள் விருந்து நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பாய் பிரிவு பணிப்பாளர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள், இந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று அனுமதிச் சீட்டுக்களைப் பெற்று பயணம் செய்தனர். கப்பல் மும்பையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விருந்து ஆரம்பமானது.
இந்த விருந்தில் அனைவரும் ஹசிஷ், கொகைன் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தினர். இதன்போது பொலிஸ் அதிகாரிகள், சோதனை நடத்தி விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள்,
போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 13 பேரைத் தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளனர்.
அனைவரிடமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை இடம்பெற்ற நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட்ட 8 பேரைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்யன் கான் உட்பட்ட 3 பேரை பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
