இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் நாளை வருகை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
40 ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டம்
தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரி தொழிற்துறைக்கு மட்டும் பயன்படுத்தப்பட அரசாங்க வர்த்தக கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
இந்த முட்டைகளை பேக்கரி தொழிற்சாலைகளுக்கு 40 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
