முட்டையின் நிர்ணய விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை இன்று (25.07.2023) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், போட்டித் தன்மையில் விலையை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என சபை தெரிவித்துள்ளது.
வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 46 ரூபாவும் நிர்ணய விலையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்
மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து லங்கா சதொச நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 35 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதோடு, பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
