முட்டை விலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நியாயமான விலை
பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முட்டை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.