இலங்கையில் 80 ரூபாயாக அதிகரிக்கும் முட்டை விலை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் தற்போது முட்டையின் விலை 50 - 60 ரூபாய் வரையில் இருப்பதாகவும், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் நிலையில் இந்த விலை உயரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டி ஒக்ரே ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கால்நடை தீவனத்தின் விலை உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு என பல பிரச்னைகள் எழுந்துள்ளதாகவும், வெறும் கலந்துரையாடல்ளை மட்டும் நடத்தி தீர்வு காண முடியாது என்றும் தலைவர் தெரிவித்தார்.
நமது உணவில் விலங்கு புரதம் இருப்பது அவசியம். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மட்டுமின்றி நம் அனைவருக்கும் பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் இருந்து புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan