நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடை நிறுத்தம்! உடன் நடைமுறை
நாடளாவிய ரீதியில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு முட்டை விநியோகம் இடைநிறுத்தப்படுகின்றது.
முட்டைக்கு அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
முட்டைக்குத் தட்டுப்பாடு..

இதன் காரணமாக நாடு முழுவதும் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.
முட்டைகளை அரசு நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்தால் வியாபாரத்தில் நட்டம் ஏற்படுவதோடு, வியாபாரத்திற்கு தேவையான கால்நடை தீவனம், போக்குவரத்து கட்டணங்கள் இதை விட அதிகமாக செலவாகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளமை குறிப்பிடதக்கது.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam