கடுமையாக அதிகரித்துள்ள முட்டையின் விலை: அமைச்சர் எடுத்துள்ள தீர்மானம்
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை முட்டை இறக்குமதியை தொடரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மிக அதிக விலை
இதேவேளை, அரசாங்கத்திடம் சுமார் 06 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவற்றை எதிர்வரும் காலங்களில் சந்தைக்கு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலில், முட்டை ஒன்றின் விலை 55 ரூபாவிற்கு கீழ் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தையில் ஒரு முட்டையின் விலை 60 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |