முட்டை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சினால் இந்த யோசனை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
விலை அதிகரிப்பு
சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு குறித்து நேற்றைய தினம் அமைச்சில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது,
இதற்கமைய முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 30 ரூபா செலவாவதாகவும், நாட்டில் நாளொன்றுக்கு 5.8 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளொன்றில் நாட்டின் முட்டை தேவை 7.5 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை உற்பத்தி
முட்டை உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் சில்லறை வியாபாரி ஆகியோரை பாதுகாக்கும் வகையில் முட்டையின் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது,
முட்டையின் அதிகபட்ச விலை குறித்து விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்சன யாபா, அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.