தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வீட்டை அழிப்பதற்கு முயற்சி: சிவாஜிலிங்கம் முக்கிய தீர்மானம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை அழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சூழ்ச்சித் திட்டங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கடிதமொன்று பிரபாகரனின் சகோதரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, அந்தக்கடிதத்தில், “ உலக தலைவர்கள் வாழ்ந்த இடங்கள் இன்று வரை அருங்காட்சியகங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதனை போன்று பிரபாகரன் கடந்த 15 வருடங்களாக வாழ்ந்த வீடும் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும், பிரபாகரனின் வீட்டை அழிக்க முற்படும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை உள்ளது. இது தொடர்பான முடிவை எங்களுக்கு 28.02.2026 திகதி முன்னர் தெரியப்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது என வாசித்துக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் வேறு என்னென்ன விடயங்களை இந்த ஊடகச்சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை காணொளியில் பார்க்கலாம்.