ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி..! அரச தரப்பில் எழுந்த சந்தேகம்
2024 ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய ஜனாதிபதித் தேர்தல் உட்பட தேசிய தேர்தல்களை ஒத்திவைக்கும் மற்றொரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்தே இந்த சந்தேகம் அரசியல் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது.
கலப்பு முறையின் கீழ் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அனுமதி கோரிய அமைச்சரவை தீர்மானத்தை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி வாக்காளர்கள் 160 உறுப்பினர்களை தெரிவு செய்வார்கள். மேலும் 65 இடங்கள் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒதுக்கப்படும்.
இது தொடர்பான பணிகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவை உபகுழு அமைக்கப்படவுள்ளது. தற்போதைய தேர்தல் முறையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் விருப்பு வாக்குகள் முறையில் மாற்றம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரசியலில் ஊழல், அரசியல் துவேசம், உட்கட்சி மற்றும் உட்கட்சி வன்முறைகளுக்கு வழிவகுத்துள்ளமையே இந்த வலியுறுத்தலுக்கான காரணமாகும்.
புதிய முறையினால் சட்டசிக்கல்
எனினும் தற்போது இது தொடர்பிலான முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவது, தேர்தல் முறை சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் தேசிய தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயமாக இருக்குமா என்று எதிர்க்கட்சிகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை 2017ஆம் ஆண்டு, மாகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையினால் சட்டசிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாகாணசபைத் தேர்தல் தாமதப்படுத்தப்பட்டு வருவதை, அவர்கள் தமது அச்சத்துக்காக நியாயப்படுத்துகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான தனது அண்மைய சந்திப்பின் போது
தேர்தல் சீர்திருத்தங்கள் அல்லது எந்தவொரு தேர்தலை ஒத்திவைப்பது குறித்தும்
தான் ஒருபோதும் கலந்துரையாடவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
