அமெரிக்க காங்கிரசிற்குள் நகர்த்தப்பட்ட ஈழத்தமிழர் விவகாரம்! தற்போதைய நிலவரம்
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் அவையிலே தாக்கல் செய்யப்பட்ட ஹவுஸ் ரெசோலேசன் 413 மசோதா வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டையும் வலியுறுத்துகிறது என வட அமெரிக்காவின் அனைத்து பிரிவுகளுக்குமான தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், தற்போது பல்வேறு பட மனித உரிமை செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருப்பவருமான சுந்தர் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அமெரிக்கக் காங்கிரஸ் அமைச்சரவையில் உங்களுடைய முதல் முயற்சி தொடர்பில் விளக்க முடியுமா என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் அவையிலே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதாவின் படி மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், இன அழிப்பு போன்ற குற்றங்களுக்காக பன் நாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த குற்றங்களை எடுத்து செல்வதற்காக அமெரிக்காவை வலியுறுத்துகிறது இந்த தீர்மானம்.
அத்துடன் போர்க் குற்றம் செய்தவர்களை மக்னீக் சி ஆக்ட் என்ற சட்டத்தின் படி அமெரிக்காவிலேயே விசாரணை மற்றும் வழக்குகளையும் ஆராய அமெரிக்க அரசாங்கத்தை இந்த மசோதா வலியுறுத்துகிறது. மேலும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டையும் வலியுறுத்துகிறது.
இந்த மசோதா அமெரிக்காவிலே காங்கிரஸ் அவையிலே தாக்கல் செய்யப்பட்டு இதுவரை 17 உறுப்பினர்கள், எம்.பிக்கள் கையெழுத்திட்டு உள்ளார்கள். மேலும் பல உறுப்பினர்கள் எம்.பிக்களது ஆதரவை நாம் கோரிக்கொண்டிருக்கிறோம்.
நிச்சயமாக இந்த மசோதா அமெரிக்காவிலே தமிழர்களுடைய கோரிக்கைகள் சார்ந்து அடுத்த கட்டத்துக்கு இந்த கோரிக்கைகளை எடுத்துச் செல்லும் மசோதாவாக இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam