சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள் : கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
மேலதிக வகுப்புக்களுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில், பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்களா என்பது தொடர்பில், ஆராய வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இவ்வருட உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது பாரதூரமான விடயமாகும்
மேலும் தெரிவிக்கையில்,
முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், தற்போதுள்ள போட்டிகளின் அடிப்படையில் சில ஆசிரியர்கள் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது பாரதூரமான விடயமாகும்.
இதனால், பரீட்சைகள் திணைக்களம் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வருட உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
மீள நடத்தப்படும் பரீட்சை
மேலும், பரீட்சை வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பரீட்சை திணைக்களத்தினால் இரத்துச் செய்யப்பட்ட விவசாய விஞ்ஞானப் பாடத்தின் இரண்டாம் பகுதி வினாத்தாள் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரையில் நடைபெறும்.
அத்துடன், முதலாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.
பரீட்சை தொடர்பான விபரங்கள் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அந்தந்த அதிபர்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |