ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு விசேட திட்டம்
பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஓய்வுபெற்ற மற்றும் சேவையை விட்டு வெளியேறிய ஆசிரியர்களினால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
32,000 ஆசிரியர் வெற்றிடங்கள்
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(24.08.2023) விடுத்த அறிக்கையில் மேற்படி திட்டம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 5,400 கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி சுமார் 32,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




